Saraswathi Namasthubhyam


विमलपटी कमलकुटी पुस्तकरुद्राक्षशस्तहस्तपुटी ।
कामाक्षि पक्ष्मलाक्षी कलितविपञ्ची विभासि वैरिञ्ची ॥

விமலபடீ கமலகுடீ புஸ்தகருத்ராக்ஷஶஸ்தஹஸ்தபுடீ |
காமாக்ஷி பக்ஷ்மலாக்ஷீ கலிதவிபஞ்சீ விபாஸி வைரிஞ்சீ ||

‘மூக பஞ்சதீ’யின் ஆர்யா சதக சுலோகமொன்று காமாக்ஷியை சரஸ்வதியாகவே பாவிக்கிறது. ‘விமலபடீ’ என்று அது ஆரம்பமாகிறது. அதாவது, மாசு மறுவே இல்லாத தூய வெள்ளைக்கலை உடுத்தியிருக்கிறாள் என்கிறார். காச்மீரம் முழுதுமே இப்படித்தான் வெண்பனி மலைகளால் மூடப்பட்டு ஸரஸ்வதி மயமாக இருக்கிறது. சரத் காலத்தின் விசேஷமும் இது தான். ‘சரத் சந்திரன்’ என்று கவிகள் விசேஷித்துச் சொல்கிற நிலவு இந்தக் காலத்தில்தான், மிகவும் தாவள்யமாக லோகம் முழுவதற்கும் தூய சந்திரிகையை ஆடை மாதிரிப் போர்த்துகிறது. இந்த சரத் காலத்தில்தான் ஆகாசத்துக்கு வெள்ளாடை போர்த்தினது போல் எங்கே பார்த்தாலும் வெண்முகில்கள் சஞ்சரிக்கின்றன. ஸரஸ்வதி அநுக்ரஹிக்கிர உண்மையான ‘வித்யை’ சரத்கால சந்திரனைப் போலவும், சரத்கால மேகத்தைப் போலவும், தாப சாந்தியாக, தூய்மையாக இருக்கும். வெறும் படிப்பு பலவிதமான தாபங்களையே உண்டாக்குகிறது. மெய்யறிவே தாபசாந்தியைத் தரும்.
(மஹாபெரியவாளின் தெய்வத்தின் குரல் – முதல் பாகம் – தேவதாமூர்த்திகள்; அவதார புருஷர்கள் – ஸரஸ்வதி)

4 thoughts on “Saraswathi Namasthubhyam

  • November 26, 2019 at 5:11 pm
    Permalink

    வாணி துணை

    Reply
  • November 19, 2019 at 4:59 pm
    Permalink

    So beautiful sowmya. Never seen such a smiling Saraswathi.

    Reply
  • November 18, 2019 at 10:34 pm
    Permalink

    या कुन्देन्दुतुषारहारधवला या शुभ्रवस्त्रावृता
    या वीणावरदण्डमण्डितकरा या श्वेतपद्मासना ।
    या ब्रह्माच्युतशङ्करप्रभृतिभिर्देवैस्सदा पूजिता
    सा मां पातु सरस्वती भगवती निश्शेषजाड्यापहा ॥

    Reply

Leave a Reply

%d bloggers like this: